Wednesday 1st of May 2024 08:52:41 PM GMT

LANGUAGE - TAMIL
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் நீதிக்கான 'தீச்சட்டி' ஏந்திய போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் நீதிக்கான 'தீச்சட்டி' ஏந்திய போராட்டம்!


வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமானது. இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீச்சட்டிகளை ஏந்தியவாறு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றல் வரை ஏ9 வீதி ஊடாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டத்தின் 4 ஆண்டு நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டு ஆரம்பித்துள்ள இன்றைய நாளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு துணிகளால் கண்களை கட்டி முழங்காலில் இருந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தினை அவர்கள் ஊடகங்களிற்கு வழங்கியிருந்தனர்.

இதன்போது இரண்டு தாய்மார் மயக்கமடைந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், எம் கே. சிவாஜிலிங்கம் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்த கொண்டிருந்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE